2025 மார்ச் 01ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2025-03-01 |
|
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2023 ஆம் ஆண்டுக்கான நில அளவைச் சபையின் ஆண்டறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரீ.கே. ஜயசுந்தர - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
நிலைபெறுதகு மின்சக்தி மற்றும் நிலைபெறுதகா மின்சக்தி உற்பத்தி போன்றவை.
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ வலுசக்தி அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று
அரசு துறை சம்பள உயர்வு காரணமாக தாதிகளின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான கூற்றொன்றினை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) சோ்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச்சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii) உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) குற்றச் செயல்களின் வரும்படிகளை அறவிடுவதற்காக ஏற்பாடு செய்வதற்கும், குற்றச் செயல்களின் வரும்படிகள் பற்றிப் புலனாய்வு செய்வதற்காகவும், அவற்றைத் தடை செய்வதற்காகவும், இழப்பிப்பதற்காகவும், கையுதிர்ப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், குற்றச் செயல்களின் தடை செய்யப்பட்ட வரும்படிகளைப் பாதுகாப்பதற்காகவும், பேணிக்காப்பதற்காகவும், முகாமை செய்வதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; குற்றச் செயல்களின் வரும்படிகள் முகாமை அதிகாரசபையைத் தாபிப்பதற்கும்; குற்றச் செயல்களின் வரும்படிகளை அறவிடுதல் தொடர்பாக முகவராண்மைகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்காகவும் சர்வதேச உடனுழைப்புக்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக
“குற்றச் செயல்களின் வரும்படிகள்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நீதி நிர்வாகம் குறித்த விசேட குழுவை தாபிப்பதற்கான முன்மொழிவு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 3ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.