2025 பெப்ரவரி 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-02-28

Print

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பத்தாவது பாராளுமன்றத்திற்காக “மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினை” மீண்டும் தாபித்தல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVI ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஆண்டறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன - நான்கு மனுக்கள்
(ii)    கௌரவ நலின் ஹேவகே                    
(iii)    கௌரவ அநுராத ஜயரத்ன - இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ ஆர்.எம். காமிணி ரத்நாயக்க   
(v)    கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி
(vi)    கௌரவ ஜகத் விதான
(vii)    கௌரவ திலிண சமரகோன் - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்

வட மாகாணத்தில் உள்ள கிராமங்களில் விளையாட்டு மைதானங்களை நிர்மாணித்தல்

(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று

பாடசாலை ஆசிரியர்களுக்கான அரசாங்க ஆட்சேர்ப்பு கொள்கை, குறைந்தபட்ச தகைமை, வெற்றிடங்கள் போன்றவை தொடர்பாக 2025.02.25 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ திலித் ஜயவீர அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 1ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.