2025 பெப்ரவரி 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-02-27

Print

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2 : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் மதுபானங்கள் மீதான மதுவரித் தீர்வை தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 சனவரி 10 ஆம் திகதிய 2418/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 01/2025)
(ii)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தித் தீர்வை தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2025 சனவரி 10 ஆம் திகதிய 2418/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii)    2025 வரைவு மதிப்பீட்டின் நிரல்களில் உத்தேச திருத்தங்களின் பட்டியல்.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான 1990 சுவசெரிய அறக்கட்டளையின் ஆண்டறிக்கை.
(v)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர -  நான்கு மனுக்கள்
(ii)    கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி
(iii)    கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ
(iv)    கௌரவ பத்மசிரி பண்டார  - இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ சுனில் ரத்னசிரி
(vi)    கௌரவ தினிந்து சமன் -  நான்கு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

குற்றச் சம்பவங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு (ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நோர்வுட் பிரதேச செயலகத்தை பிறிதொரு இடத்திற்கு இடமாற்றம் செய்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மனோ கணேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1834 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 28ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.