இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2025 பெப்ரவரி 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-02-25

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 சனவரி 27 ஆம் திகதிய 2421/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்.
(ii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 சனவரி 31 ஆம் திகதிய 2421/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்.
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில்  பதுளை, காலி, பொலன்னறுவை, கேகாலை, கம்பஹா, நுவரெலியா, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, மாத்தளை, கண்டி, களுத்துறை, மாத்தறை, குருநாகல், அநுராதபுரம், புத்தளம், கொழும்பு, மொனராகலை, முல்லைத்தீவு, அம்பாறை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டச் செயலகங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்.
(iv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  பதிவாளர் நாயகத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(v)    2023 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதியத்தின் ஆண்டறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா  - மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ ரோஹண பண்டார -  இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ கயான் ஜனக                    
(iv)    கௌரவ சுசந்த குமார நவரத்ன -  இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ அருண பனாகொட - இரண்டு மனுக்கள்
(vi)    கௌரவ நிஷாந்த பெரேரா                    
(vii)    கௌரவ ரவீந்திர பண்டார                    
(viii)    கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க                    
(ix)    கௌரவ சந்தன சூரியஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ திலித் ஜயவீர

பாடசாலை ஆசிரியர்களுக்கான அரசாங்க ஆட்சேர்ப்பு கொள்கை, குறைந்தபட்ச தகைமை, வெற்றிடங்கள் போன்றவை.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா 

தன்மீது தாக்குதல் மற்றும் பாதுகாப்பு கோருதல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2025) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2025) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 155 பேரும் எதிராக 46 பேரும் வாக்களித்தனர்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1825 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 27ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom