2025 பெப்ரவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2025-02-24 |
|
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கிரிஷாந்த அபேசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ
(ii) கௌரவ ருவன்திலக்க ஜயகொடி - ஏழு மனுக்கள்
(iii) கௌரவ தனுர திசாநாயக - ஐந்து மனுக்கள்
(iv) கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத் - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ முஹம்மட் பைசல் - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று
கொள்கலன் கையாளுதலில் விடுவித்தல் சிக்கல்கள், தாமதம் போன்றவை தொடர்பாக 2025.02.05 அன்று பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
உயர் பதவிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 127 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல், 2025 பெப்ரவரி 22 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு உயர் பதவிகள் பற்றிய குழுவின் தவிசாளர் பதவியை பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் வகிப்பாராக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுகத் வசந்த த சில்வா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 பெப்ரவரி 25ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.