2025 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-02-22

Print

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
2 : பாராளுமன்ற கட்சித் தலைவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் விசேட கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(ii)    2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 16 ஆம் பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 112 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2024 டிசம்பர் 22 ஆம் திகதிய 2415/79 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அஜித் பி. பெரேரா - நான்கு மனுக்கள்
(ii)    கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம
(iii)    கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க - ஏழு மனுக்கள்
(iv)    கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான - மூன்று மனுக்கள்
(v)    கௌரவ சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று

(i)    கல்லோயாவில் ‘மீனகயா’ புகையிரதத்தில் மோதிய யானைகள் தொடர்பான கூற்றொன்றினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் முன்வைத்தார்.
(ii)    நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மின் துண்டிப்பிற்கான காரணம் தொடர்பாக 2025.02.18 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் பதிலளித்தார்.
(iii)    நிதி கையிருப்பு, வெளிநாட்டுக் கடன் போன்ற விபரங்கள் தொடர்பாக 2025.02.21 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக கௌரவ (பேராசிரியர்) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2025) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வட மாகாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தீர்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ துரைராசா ரவிகரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 பெப்ரவரி 24ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.