2025 பெப்ரவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-02-20

Print

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 இன் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள்.
(ii)    2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75 (1) பிரிவின் கீழ் இரட்டை வரி விதிப்பினை தவிர்ப்பதற்காக மற்றும் வரி செலுத்தாது தட்டிக் கழிப்பதனை தடுப்பது தொடர்பில் 2013 யூலை  26 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 2013 செப்டெம்பர் 17 ஆம் திகதிய இலக்கம் 1828/9 கொண்ட அதிவிஷேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இந்தியக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை திருத்தப்பட்டு, 2024 டிசெம்பர் 16 ஆம் திகதி திகதியன்று செய்துகொள்ளப்பட்ட  கூட்டிணைந்த பத்திரம்.
(iii)    2022/2023 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை லிமிரெட்டின் வருடாந்த அறிக்கை.
(iv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள்  தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ கயந்த கருணாதிலக்க - மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ  லசித் பாஷண கமகே - ஏழு மனுக்கள்
(iv)    கௌரவ  சதுர கலப்பத்தி - ஐந்து மனுக்கள்
(v)    கௌரவ  (டாக்டர்) ஜகத் குணவர்தன                    
(vi)    கௌரவ  கோசல நுவன் ஜயவீர                    
(vii)    கௌரவ  லால் பிரேமநாத்                    
(viii)    கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே                   
(ix)    கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ சட்டத்தரணி (திருமதி) நிலந்தி கொட்டஹச்சி 

‘டெய்லி மிரர்’ மற்றும் பிற ஊடகங்கள் தன் குறித்து வெளியிட்ட தவறான செய்தி அறிக்கை தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2025) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அம்பாறை பெரியநீலாவணையிலுள்ள மதுபானசாலை உரிமங்களை இடைநிறுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 பெப்ரவரி 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.