2025 பெப்ரவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2025-02-06 |
|
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எண்டன் ஜயகொடி
(ii) கௌரவ மஹிந்த ஜயசிங்ஹ
(iii) கௌரவ அசோக சபுமல் ரன்வல
(iv) கௌரவ கோசல நுவன் ஜயவீர - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ அருண பனாகொட
(vi) கௌரவ ஸ்டெபனி பிரனாந்து - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படல்
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மன்னார் காற்றாலை மின்சாரத் திட்ட கேள்விமனு நடைமுறை தொடர்பான சிக்கல்கள் தொடர்பான கூற்றொன்றினை வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 ஜனவரி 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ உபுல் கித்சிறி
(ii) கௌரவ அஜித் பி. பெரேரா
அதனையடுத்து, 1714 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.