2025 ஜனவரி 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2025-01-23 |
|
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : பாரளுமன்ற கட்டடத் தொகுதியில் தைப்பொங்கல் கொண்டாட்டம்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
கடவுச்சீட்டு தொடர்பான சிக்கல்கள்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
தனக்கு பாராளுமன்றத்தில் பேச நேரம் ஒதுக்காமை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1749 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜனவரி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.