2025 ஜனவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2025-01-09

Print

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : குழுக்களில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LX, LXI மற்றும் LXII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVII, XXVIII, XXIX மற்றும் XXX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XV, XVI மற்றும் XVII ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i)    2025 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“ஒதுக்கீடு”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.

(ii) குறித்த சில உள்ளூர் அதிகாரசபைகளின் தோ்தல்கள் கோரப்பட்டு பின்போடப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும் தோ்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக

“உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 மற்றும் 10 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்
(iii)    நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம்
(iv)    செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்புப் பிரேரணை

“வாழ்க்கைச் செலவு உயர்வு” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை அமில பிரசாத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.