2025 ஜனவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2025-01-07 |
|
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : பத்தாவது பாராளுமன்றத்திற்காக இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம்
D : பத்தாவது பாராளுமன்றத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினை மீண்டும் தாபித்தல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLIII, XLIV மற்றும் XLV ஆம் பகுதிகளையும்;
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVII, LVIII மற்றும் LIX ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXI, XXII, XXIII, XXIV, XXV மற்றும் XXVI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XII, XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் X, XI, XII, XIII மற்றும் XIV ஆம் பகுதிகள்
(ii) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 36(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலக நிதிக்கூற்றுக்கள் தொடர்பான சுயாதீன கணக்காய்வாளர்களின் அறிக்கை, அச்சட்டத்தின் 36(3) ஆம் பிரிவு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவாசயப் பட்டப் பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iv) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், அப்போதைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 17 ஆம் திகதிய 2384/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(v) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 டிசம்பர் 04 ஆம் திகதிய 2413/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(vi) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் அப்போதைய அப்போதைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 யூன் 18 ஆம் திகதிய 2389/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(vii) 2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 17 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 30 ஆம் திகதிய 2382/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(viii) 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 ஆம் பிரிவின் கீழ் சீட்டாட்டத் தொழில் உரிமமளித்தல் ஒழுங்குவிதிகள் தொடர்பில் அப்போதைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 மே 29 ஆம் திகதிய 2386/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி.
(ix) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக அப்போதைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 மார்ச் 28 ஆம் திகதிய 2377/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(x) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 54 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71(2) ஆம் பிரிவின் (ட) ஆம் பந்தியின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவினதும் 1973 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கூட்டாட்சியாதன முகாமை அதிகாரசபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட கூட்டாட்சியாதன முகாமை அதிகாரசபையினதும் கலந்தாலோசனையுடனும் கொழும்புத் துறைமுக நகரின் கூட்டாட்சி முகாமை தொடர்பில் அப்போதைய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 26 ஆம் திகதிய 2394/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் அப்போதைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 மே 17 ஆம் திகதிய 2384/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் அப்போதைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 யூலை 31 ஆம் திகதிய 2395/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 ஒக்டோபர் 02 ஆம் திகதிய 2404/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 ஒக்டோபர் 14 ஆம் திகதிய 2406/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 நவம்பர் 01 ஆம் திகதிய 2408/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xvi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 நவம்பர் 30 ஆம் திகதிய 2412/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xvii) 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 09 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி நன்மைகள் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 டிசம்பர் 21 ஆம் திகதிய 2415/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம்.
(xviii) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(இ)1 உறுப்புரையின் பிரகாரம் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் ஆக்கப்பட்டு, 2024 நவெம்பர் 25 ஆம் திகதிய 2412/01 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பொருட்கள், வேலைகள், ஆலோசனையல்லாத சேவைகள் ஆகியன பற்றிய பெறுகை வழிகாட்டுதல்கள் - 2024.
(xix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பீடங்கள் மற்றும் கற்கைத் துறைகளை நிறுவுதல் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 26 ஆம் திகதிய 2394/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xx) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அப்போதைய முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 செப்தெம்பர் 05 ஆம் திகதிய 2400/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xxi) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்.
(xxii) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான தொலைக் கல்வி நிலையத்தின் வருடாந்த அறிக்கைகள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரையாண்டு அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை - 2024” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜனவரி 8ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.