இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் வெளியான ஊடகச் செய்தி பற்றியது

திகதி : 2025-01-06

“பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் 2024.12.29ஆம் திகதி ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா  கீழ்வரும் விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்கமைய, பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபாவும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாவும் செலவு செய்யப்பட்டிருப்பதாக குறித்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2020.08.20ஆம் திகதியும், பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பம் 2024.11.21ஆம் திகதியும் இடம்பெற்றன.

இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரங்களுக்கான செலவுகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் வேறுபடுகின்றன.

 

  • ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாராளுமன்றங்களின் முதல்நாள் அமர்வுகளுக்கிடையில் 4 வருட கால இடைவெளி காணப்படுகின்றது. இக்கால இடைவெளியில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற  இறக்கங்கள் விருந்துபசாரத்துக்கான செலவுகள் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் அதிகரிப்பதற்குப் பிரதான காரணமாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்தமையால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அண்ணளவாக 100% இனால் அதிகரித்துள்ளன.
  • மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, இராஜதந்திரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் என பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom