இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகரை சந்தித்தார்

திகதி : 2025-01-03

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், கௌரவ சபாநாயகர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (ஜன. 01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இதன்போது சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜி (Zhao Leji) அவர்களின் வாழ்த்துக் கடிதத்தை சீனத் தூதுவர் புதிய சபாநாயகரிடம் கையளித்தார். சீனத் தூதுவர் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில், குறிப்பாக பரிமாற்றத் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் இரண்டு சட்டவாக்க நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பொலன்னறுவையில் உள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் சிறப்பு  வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக தனது முன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கௌரவ சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன, இலங்கை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நன்றி தெரிவித்தார். இரு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில்  இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள் புதுப்பிப்பதற்கான ஆர்வத்தையும் சபாநாயகர் வெளிப்படுத்தினார்.

அத்துடன், ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் சீனவுக்கான முதலாவது விஜயத்துக்கான தயார்படுத்தல் தொடர்பில் குறிப்பிட்ட சீனத் தூதுவர் கீ சென்ஹொங், இந்த வரலாற்று நிகழ்வு இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

 

3 4

5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom