2024 டிசம்பர் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-12-17 |
|
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
• கெளரவ மொஹொமட் பைஸர் முஸ்தாபா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
• கெளரவ அர்ஜுன சுஜீவ சேனசிங்க அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
• கெளரவ முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
• கெளரவ மனோ கணேஷன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயாகரின் இராஜினாமா
சபாநாயகர் பதவியில் இருந்த கௌரவ அசோக சபுமல் ரன்வல அவர்களின் இராஜினாமாவை கௌரவ சனாதிபதி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து சனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதங்கள்
சபாநாயகர் தெரிவு
10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, பா.உ. அவர்கள் கெளரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ., கௌரவ கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார். அதனையடுத்து, புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட கெளரவ கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட்டவர்களினால் அக்கிராசனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அரசாங்க தரப்பு மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த பல்வேறு அரசியட் கட்சிகளின் தலைவர்களினால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன. கெளரவ சபாநாயகர் அதற்கு பதிலுரை ஆற்றினார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : காலப்பிரிவிற்கான ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்திட்டம் (NAP) தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை அமர்வு
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதி – ஸ்ரீ லங்கா கராதே தோ சம்மேளனத்தின் 2017 சனவரி முதல் 2022 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iii) திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் கொழும்பு வெஸ்ட் இன்டர்நெசனல் டேர்மினல் (பிறைவட்) லிமிட்டெட் தொடர்பில் அப்போதைய முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 செப்தெம்பர் 10 ஆம் திகதிய 2401/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(iv) 2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2024.08.21 முதல் 2024.10.10 வரை மற்றும் 2024.10.14 முதல் 2024.11.25 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்புகள்
(v) 2023 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
(viii) 2022 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் ஆண்டறிக்கை
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2023 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(xi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii) 2023 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2023 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2023 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு, செலவுகள் போன்றவற்றை குறைத்தல் தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி
தனது கல்விசார் தகைமைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 102 - நிகழ்ச்சித்திட்டம் 01 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பு” தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2024 டிசம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.