2024 டிசம்பர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-12-04

Print

கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் உருகுணை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2024 நவெம்பர் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக இருப்பதற்கு சிரேஷ்ட பேராசிரியர் ஆர்.எம்.யூ.எஸ்.கே. ரத்நாயக அவர்களை நியமித்தல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 நவெம்பர் 24 ஆம் திகதிய 2411/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மகாவீரர் நினைவேந்தல் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர், கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ றிஸாட் பதியுதீன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 2130 மணியளவில் பாராளுமன்றமானது 2024 டிசம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.