அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (டிச. 04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணி வரை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் |
திகதி : | 2024-12-03 |
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளையதினம் (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, கௌரவ ஜனாதிபதி அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நாளை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கு இடம்பெறும். வாக்கெடுப்பு முடிவடைந்ததும் பி.ப 5.30 மணிக்கு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






