பாராளுமன்றத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட கடவத்தை மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற முதலாவது அமர்வு |
திகதி : | 2024-11-04 |
கடவத்தை மத்திய மகாவித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு அண்மையில் (ஒக். 29) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனநாயகத்தின் விழுமியங்களை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் குறித்த பாடசாலையும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் கடவத்தை மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.குணரத்ன அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
இதில் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பிரதான அதிகாரி உமங்கா பண்டித்த அவர்கள் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் அதன் வகிபாகம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து உரிய விழிப்புணர்வை பாடசாலை காலத்தில் பெற்றுக்கொள்வதன் மூலம் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முறையான வகையில் உரிய பதில்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.குணரத்ன, மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் பெற்ற அனுபவத்தை நடைமுறைப்படுத்துவதன் பெறுமதியை விளக்கினார்.
அதன்பின் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு தொடங்கப்பட்டு சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். முதலாவது மாணவர் பாராளுமன்ற அமர்வில் ஒவ்வொரு அமைச்சரும் அந்தந்த அமைச்சுக்களால் செயற்படுத்தப்பட எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்த விளக்கத்தை சபைக்கு வழங்கினர்.
மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கு உத்தியோகபூர்வ பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கடவத்தை மத்திய கல்லூரியின் உதவி அதிபர்களான எம்.டி.பி.எஸ்.குணதிலக, ஆர்.டபிள்யூ.எல்.ஜயவர்தன, எம்.வி.பி.சுவர்ணரேகா ஆகியோரும், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










