கொழும்பு ஆனந்த கல்லூரியின் மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் |
திகதி : | 2024-10-28 |
கொழும்பு ஆனந்த கல்லூரியின் மூன்றாவது மாணவர் பாரளுமன்றத்தின் முதல் அமர்வு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் அண்மையில் (ஒக். 25) இடம்பெற்றது.
ஆனந்த கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் பிரயோக ரீதியான அனுபவத்தை வழங்கும் வகையில் கல்லூரி மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் ஆனந்த கல்லூரி பழைய மாணவரும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமுமான ஹன்ஸ அபேரத்ன, ஆனந்த கல்லூரி பழைய மாணவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹணதீர, கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் லால் திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு பாராளுமன்றம் மற்றும் அதன் பணிகள் தொடர்பில் மாணவர்களைத் தெளிவூட்டும் வகையில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற முறைமை தொடர்பில் முழுமையான விளக்கத்தை வழங்கினார்.
இதன்போது, கொழும்பு ஆனந்த கல்லூரியின் மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனையடுத்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அதனையடுத்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வோர் அமைச்சர்களும் தமது அமைச்சுக்களினால் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் தொடர்பில் சபையில் தெளிவுபடுத்தனர்.
அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கொழும்பு ஆனந்த கல்லூரியின் ஆசிரியர்கள், அழைக்கப்பட்ட பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















