இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோருக்கு பாராளுமன்ற பணியாளர்களின் கௌரவம்

திகதி : 2024-10-11

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் (09) நடைபெற்றது.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததும் பாரம்பரியமாக இடம்பெறும் கௌரவமளிக்கும் நிகழ்வாக இம்முறையும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகள், பணியாளர்களின் பங்களிப்புடன் இந்தக் கௌரவமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது பதவிக்காலத்தில் பணிகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயக குழாம் உள்ளிட்ட பணியாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்ற பணியாளர்களுடன் சிநேகபூர்வமான முறையில் கலந்துரையாடிய சபாநாயகர், பாராளுமன்ற பணியாளர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் துணைவியார் நெலும் வளவகே அவர்களும் இணைந்துகொண்டதுடன், தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமையை பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

 

1 2

3 4

5 6

7 8

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom