இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ அநுர குமார திஸாநாயக அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததன் காரணமாக ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

திகதி : 2024-09-23

கொழும்பு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர குமார திஸாநாயக அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அப்பதவியை 2024 செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் ஏற்றுக் கொண்டதன் காரணமாக, அத்திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்திருப்பதாக அவர் தனக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின், 66(இ) உறுப்புரையின் பிரகாரமும், 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்த்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் கீழ் இதனைத் தெரிவிப்பதாக செயலாளர் நாயகம் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom