கருணாரத்ன பரணவிதானகே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் |
திகதி : | 2024-09-03 |
கௌரவ கருணாரத்ன பரணவிதானகே அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (செப். 03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய கௌரவ தலதா அதுகோரல அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே கௌரவ கருணாரத்ன பரணவிதானகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌரவ கருணாரத்ன பரணவிதானகே அவர்கள் எட்டாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருந்ததுடன், அந்தக் காலப்பகுதியில் வெகுஜன ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி, உள்ளூராட்சி மன்றம் போன்ற அமைச்சுக்களின் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








