இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பாராளுமன்றங்களுக்கான SDG இலக்குகளை அடைவதற்கான 2024 ஆம் ஆண்டுக்கான பிராந்திய மாநாடு மற்றும் IPU உடன் NPC இன் இணைப்பின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன பங்கேற்பு

திகதி : 2024-09-02

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்துடனான (IPU) சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) 40வது ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான பிராந்திய மாநாடு கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை சீனாவில் இடம்பெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் சார்பாக பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ கலாநிதி துலியா ஆக்சன், அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கௌரவ மார்ட்டின் சுங்கோங், மற்றும் கௌரவ சபாநாயகர்கள், பிரதி சபாநாயகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர் நாயகங்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 34 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இந்தக் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் போது சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி சி. ஜின்பிங், தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் சாவோ லெஜி, தேசிய மக்கள் காங்கிரஸின் துணைத் தலைவர் லீ ஹொங்சொங், தேசிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் லியு குய், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஷன்க்ஸி மாகாணத்தின் செயலாளர் டங் டெங்ஜிய் தியான்ஜின் மாநகர மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர்யு யுன்லின் மற்றும் பல உயர்மட்ட சீன அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை இப்பிரதிநிதிகள் சந்தித்தனர்.

தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் சாவோ லெஜி அவர்கள் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட  மாநாட்டின் அங்குராப்பண நிகழ்வு சீனப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் நவீனமயமாக்கலுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குவதற்காக தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற ஜனநாயக அபிவிருத்தி என்ற தலைப்பில் சமிந்த குலரத்ன உரையாற்றினார்.

மாநாட்டிற்கு மேலதிகமாக சமிந்த குலரத்ன பல மாநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பாராளுமன்றங்களுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக நேரடிக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த மாநாட்டின் போது சீனப் பாராளுமன்றம், சீனப் பெருஞ்சுவர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பிரதிநிதிகள் விஜயம் செய்தனர்.

 

1 4

2 3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom