இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2024.08.21

திகதி : 2024-08-21

சட்டமூலங்களின் பரிசீலனைக்கு உறுப்பினர்கள் நியமனம்

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலம்

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, கௌரவ பிரசன்ன ரணதுங்க, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ சாமர சம்பத் தசனாயக, கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, கௌரவ மனோ கணேசன், கௌரவ இரான் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி ஆகிய உறுப்பினர்களை தான் மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஆக. 21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

“பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)" சட்டமூலம்

“பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்) எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ கஞ்சன விஜேசேகர, கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், கௌரவ றோஹண திஸாநாயக்க, கௌரவ அநுராத ஜயரத்ன, கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, கௌரவ மனோ கணேசன் மற்றும் கௌரவ இரான் விக்கிரமரத்ன ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom