இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உணவகத்தில் பணியாளர்கள் இருவர் மத்தியில் 2024.08.06 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து ஊடகங்கள் அறிக்கையிட்டமை தொடர்பானது

திகதி : 2024-08-08

பாராளுமன்ற உணவகத்தில் பணியாளர்கள் இருவருக்கிடையில் 2024.08.06 ஆம் திகதி பணியாற்றும் நேரத்தில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதன் காரணமாக கத்திக் குத்துவரை சென்றதாக நேற்று (2024.08.07) ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளமை குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உணவகத்தில் பணியாற்றும் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இதில் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொள்ள முயற்சித்தமை குறித்த சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென்றும், ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ள விடயம் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவத்தை மிகைப்படுத்தி அறிக்கையிடுவதன் மூலம் இந்நாட்டில் உள்ள அதியுயர் நிறுவனமான பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும், இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடும் போது அனைத்து ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம் என்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் வலியுறுத்தினார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom