2024 ஜூலை 26ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-07-26 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர் தொழிநுட்பவியல் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய நூலக மற்றும் தகவல் அறிவியல் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூன் 28 ஆம் திகதிய 2390/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா
தன்னைக் குறித்துக் காட்டி அரசாங்க நிதி பற்றிய குழு அறிக்கை தொடர்பாக கௌரவ ஷெஹான் சேமசிங்கவின் சிறப்புரிமைப் பிரச்சினை
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ ஏ.எச்.எம். அலவி
(ii) மறைந்த கௌரவ எம்.என். அப்துல் மஜீத்
(iii) மறைந்த கௌரவ பாலித தெவரப்பெரும
(iv) மறைந்த கௌரவ மில்ரோய் பர்னாந்து
அதனையடுத்து, 1434 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஆகஸ்ட் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.