குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் |
திகதி : | 2024-07-23 |
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஜூலை 23) பாராளுமன்றத்தின் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் இன்று (23) மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
(101ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் 2024 மே 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், நீதித்துறைச் சட்டத்தின் கீழ் 2360/22 மற்றும் 2371/13 ஆகிய வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகளுக்கும் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






