இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தொழில்முயற்சியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு விஜயம்

திகதி : 2024-07-22

இலங்கையில் உள்ள வர்த்தக மற்றும் தொழில்முனைவுத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முயற்சியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு அண்மையில் பாராளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

பாராளுமன்றக் கட்டடத்தின் கட்டடக்கலையின் மதிப்பு மற்றும் சட்டவாக்க செயற்பாடுகள் குறித்து இந்தக் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினர். பாராளுமன்றத்தில் சபாநாயகரின் வகிபாகம் மற்றும் அவருடைய அனுபவம், பாராளுமன்ற முறைமைகள் மற்றும் சம்பிரதாயம், சட்டவாக்க நடைமுறை, பாராளுமன்ற முறைமையில் காணப்படும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தொழில்முயற்சியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் இங்கு பதில் வழங்கப்பட்டது.

 

9 6

2 13

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom