2024 ஜூலை 12ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-07-12 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆண்டறிக்கை
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2023 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 32 ஆம் பிரிவின் கீழ் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஜனவரி 12 ஆம் திகதிய 2366/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 02/2024)
(vii) 2024 ஆம் ஆண்டிற்கான நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை.
(viii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் தாய்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
(ix) (81 ஆம் அத்தியாயமான) கடன் இணக்கக் கட்டளைச் சட்டத்தின் 63 ஆம் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் அக்கட்டளைச் சட்டத்தின் 6 ஆம் மற்றும் 10 ஆம் பிரிவுகளின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2381/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜே.சீ. அலவத்துவல - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• ஆக்கிரமிப்புச் செடிகள் மற்றும் விலங்குகள் காரணமாக உயிரினப் பல்வகைமைக்கு ஏற்படுகின்ற பாதிப்பினைக் குறைத்தல்
இலங்கையின் உயிரினப் பல்வகைமைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய ஆக்கிரமிப்புச் செடிகள் மற்றும் விலங்குகளை இனங்கண்டு, அவற்றைப் பெயரிடுவதன் மூலம் அத்தகைய செடிகள் மற்றும் விலங்குகள் பெருகச் செய்யப்படுவதையும், இறக்குமதி செய்யப்படுவதையும் தடை செய்து இலங்கையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அரசாங்கம் இடையீடு செய்து துரிதமாக தேவையான சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• விளையாட்டு அமைச்சின் கணக்காய்வு மற்றும் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
தற்போது இலங்கையிலுள்ள கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுச் சங்கங்களில் ஊழல் மலிந்து காணப்படுவதால், இந்த நிலைமையைத் தடுப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் கணக்காய்வு மற்றும் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• மதத் தீவிரவாதத்தினை தடுப்பதன் அவசியம்
எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு துறையிலும் தீவிரவாதக் கருத்துக்கள் காணப்படுவது மிகவும் பாதகமானது என்பதாலும், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலின் பின்னர் மதத் தீவிரவாதம் தொடர்பாக சமூகத்தில் பாரிய கருத்தாடல் ஏற்பட்டிருப்பதாலும் மதத் தீவிரவாதம் உருவாவதையும் ஊக்குவிக்கப்படுவதையும் தடுப்பதற்கும் ஏற்கனவே அதற்கு இரையாகியுள்ள நபர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் துரித வேலைத்திட்டமொன்றை அசாங்கம் வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் Z- புள்ளி (Z-Score) அடிப்படையில் அரசதுறை சார்ந்த சகல தொழில் வெற்றிடங்களையும் நிரப்புதல்
அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளும் போது முந்திய அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் அரசியல் பக்கச்சார்பு அல்லது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் பின்பற்றியுள்ள கொள்கைகள் அரச சேவையின் சுயாதீனத் தன்மைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாலும், அதன் காரணமாக தீவிர அரசியல்மயப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள அரச சேவையை முழுமையாக சுயாதீனம் கொண்ட ஒன்றாக மாற்றவேண்டிய தேவை உள்ளதாலும், கல்வித் தகைமைகளின் அடிப்படையில் மாத்திரம் தொழில்களை வழங்கும்போது திறமையான மற்றும் தகைமைகளைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கு நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதால் இளைஞர்களின் விரக்தியை அடியோடு ஒழிக்க அதன் மூலம் வாய்ப்புக் கிடைப்பதாலும், மாவட்டத்தில் ஏற்படும் வெற்றிடங்களுக்கான வாய்ப்பு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு கிடைப்பதன் ஊடாக தொழில் பெறுநர்களின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் உயர் வினைத்திறன் கொண்ட சேவையை அரச துறைக்குப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதாலும், அனைத்து அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள், சபைகள் மற்றும் மாகாண சபைகள், அனைத்து இணை நிறுவனங்களிலும் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் Z-புள்ளியினை கவனத்தில் கொள்ள அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• மலையகத் தொழிற்சங்க தியாகிகள் தினமொன்றைப் பிரகடனப்படுத்தல்
இலங்கையின் வரலாற்றில் பொருளாதாரத்திற்கு பெருமளவு பங்களிப்புச் செய்துள்ள சமூகமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுவதாலும், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஜனநாயக வழியில் போராடியே தமது உரிமைகளை வென்றெடுத்தனரென்பதாலும், அத்தகைய ஜனநாயக உரிமைப் போராட்டங்களில் உயிர்நீத்த தொழிற்சங்க தியாகிகளைப் பொதுவானதொரு நாளில் நினைவுகூரவேண்டுமென்பது இலங்கைவாழ் இந்தியா வம்சாவழி மலையக மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருப்பதாலும், 1939 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சம்பள உயர்வு கோரி இலங்கையில் இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது தொழிற்சங்கப் போராட்டத்தின் போது வெள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் “முல்லோயா கோவிந்தன்” என்ற தொழிலாளர் ஒருவர் உயிர்நீத்துள்ளதாலும், இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தில் உயிர்நீத்த முதலாவது தொாழிலாளியையும் மற்றும் அதன்பின் இடம்பெற்ற பல தொழிற்சங்கப் போராட்டங்களில் மலையப் பெருந்தோட்ட மக்களின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் போராடி உயிர்நீத்த ஏனையோரையும் நினைவுகூரும் வகையில், முதலாவது மலையகத் தொழிற்சங்கத் தியாகி உயிர்நீத்த தினமாகிய ஜனவரி 10 ஆம் திகதியை மலையகத் தொழிற்சங்கத் தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் வினாவொன்று கேட்கப்பட்டது:-
கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத்
அதனையடுத்து, 1503 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






