2024 ஜூலை 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-07-11

Print

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
B : சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
C : மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பொதுக் கல்வி,  உயர் கல்வி மற்றும்  திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகிய பிரிவுகளின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான வெகுவன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க        -     நான்கு மனுக்கள்
(ii)    கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க     -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ புத்திக பத்திறண      -     இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

கூட்டுறவு இயக்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்தார்.

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங;க ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்தல் மற்றும் இதரவை தொடர்பானது

(iii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

வெளிநாட்டு கடன்/கடன் வாங்குதல் மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு தொடர்பாக 2024.07.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சார்பாக அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ தயாசிறி ஜயசேகர 

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சி களுக்கான தயார்நிலை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரை களையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024  யூன்  மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக


ஒத்திவைப்புப் பிரேரணை

“அரசியலமைப்பு மற்றும் ஏனைய பொருத்தப்பாடுடைய சட்டங்களின் தேவைப்பாடிற்கிணங்க 2024 செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப் பகுதியினுள் சனாதிபதித் தேர்தலை நடாத்துவது” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.