உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நாளை - பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் |
திகதி : | 2024-07-10 |
- நாளை விவாதிக்கப்படவிருந்த விலங்கின நலம்பேணல் சட்டமூலத்தை எதிர்வரும் தினமொன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்
சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (ஜுலை 11) நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அரசியலமைப்பு மற்றும் ஏனைய பொருத்தப்பாடுடைய சட்டங்களின் தேவைப்பாடிற்கிணங்க 2024 செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப் பகுதியினுள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோரினால் கூட்டாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது. அதற்கமைய, நாளைய தினம் வாய்மூல விடைக்கான வினாக்களை அடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த விலங்கின நலம்பேணல் சட்டமூலத்தை எதிர்வரும் தினமொன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








