2024 ஜூன் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-06-20

Print

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான  தபால் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் புத்திக பத்திறண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா                    
(ii)    கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

இலங்கையினுள் ஆட்கள் உட்பிரவேசிப்பதனையும் இலங்கையிலிருந்து புறப்படுவதனையும் கட்டுப்படுத்துவதற்காகவும்; இலங்கைப் பிரசைகளல்லாத ஆட்கள் இலங்கையில் தங்கியிருப்பதனைக் கட்டுப்படுத்து வதற்காகவும்; பயண ஆவணங்களை வழங்குவதற்காகவும் (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தையும் 1971 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளிச்செல்கை அனுமதிப்பத்திரச் சட்டத்தையும் நீக்குவதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக

“குடிவரவு”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சி களுக்கான தயார்நிலை (B-READY) சுட்டெண்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டெண்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரை களையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024 மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 யூலை 22 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களுக்கு “கொழும்பு மொழித் திறன்கள் மற்றும் நாடகக் கலைச் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 வரையான) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன.:-
(i)    பெண்களின் வலுவூட்டல் - திருத்தங்களுடன்
(ii)    யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலத்திரனியல் மோட்டார் திட்டத்தை செயற்படுத்துதல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜகத் பிரியங்கர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூலை 9ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.