2024 ஜூன் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-06-19 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : “சத்திய ஸ்ரீ கணபதி பக்தி ஜன சேவா மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIII ஆம் பகுதியையும்;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIV பகுதியையும்; மற்றும்
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் L மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகள்
B.
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாம் தொகுதியின் III மற்றும் IV ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாம் தொகுதியின் - உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆதாரங்களுக்கு இணங்க அரசாங்கத்தினால் அறவிட வேண்டிய போதிலும் இதுவரை அறவிடப்படாத பெறுமதி சேர் வரி தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் ஆண்டறிக்கை
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிருணயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2023 ஆம் ஆண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு மற்றும் அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்கள் வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) “ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ புத்திக பத்திறண - ஏழு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் மற்றும் பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பிலான பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கல்வி அமைச்சர் பதிலளித்தார்.
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
வடக்கு, கிழக்கில் வரலாற்றுப் பெறுமதிமிக்க காணிகள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு குறைவான வசதிகள் தொடர்பாக 2024.06.18 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் சார்பாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
ஏனைய நாடுகளின் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை இலங்கையில் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; (93 ஆம் அத்தியாயமான) வெளிநாட்டுத் தீர்ப்புக்களின் வலுவுறுத்துகைக் கட்டளைச்சட்டம் மற்றும் (94 ஆம் அத்தியாயமான) தீர்ப்புக்களின் பரஸ்பர வலுவுறுத்துகைக் கட்டளைச்சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல், மற்றும் வலுவுறுத்துதல்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iii) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iv) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 001 - நிகழ்ச்சித்திட்டம் 02
(vi) தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ கபீர் ஹஷீம்
(ii) கௌரவ சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்ஸாரப்
அதனையடுத்து, 1720 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 20ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.