2024 ஜூன் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-06-18

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தம்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
C : கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
D : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான  இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(v)காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழ் வருடாந்த மதுவரி உரிமக் கட்டணங்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஜனவரி 12 ஆம் திகதிய 2366/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 01/2024)
(vi)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணங்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 01 ஆம் திகதிய 2369/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 03/2024)
(vii)    2010 ஆம் ஆண்டின் 17 ஆம் சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ்  சீட்டாட்டத் தொழில் உரிமமளித்தல் ஒழுங்குவிதிகள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2381/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(viii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 17 ஆம் திகதிய 2384/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 17 ஆம் திகதிய 2384/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(x)    2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின் பிரகாரம், 2023 இன் இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை அறிக்கை
(xi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பதிவாளர் நாயகத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, நுவரெலியா, அநுராதபுரம், களுத்துறை, மட்டக்களப்பு, மன்னார், கேகாலை, கண்டி, காலி, கிளிநொச்சி, கம்பஹா, அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனராகலை, மாத்தளை, குருணாகல், புத்தளம், கொழும்பு, பொலன்னறுவை, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலகங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xiii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் நாலக பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பியங்கர ஜயரத்ன                    
(ii)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்                    
(iii)    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர                    
(iv)    கௌரவ லலித் எல்லாவல                    
(v)    கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைவான வசதிகள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கல்வி அமைச்சர் பதிலளித்தார்.


கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

சிறப்புரிமை

கம்பளை உடபலாத்த பிரதேச செயலாளர் என்ற வகையில் திருமதி ஆத்மா திலுக்ஷி ஜயரத்னவினது நடத்தை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுராத ஜயரத்ன அவர்களினால் 2024.02.09 திகதி பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட சிறப்புரிமை பற்றிய கேள்வி, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அக்குழுவினால் 2024 யூன் 06 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் அக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 26(1)ஆ ஆம் பிரிவின் கீழ் சட்டத்துறைத் தலைமையதிபதிக்கு அறிக்கையிடும் பொருட்டு ஆற்றுப்படுத்தப்படுமாக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(ii)    உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின்  கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அனர்த்தங்களுக்கு பதிலளிப்பதற்கான வழிமுறை” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லலித் வர்ண குமார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 19ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.