2024 ஜூன் 7ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-06-07 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “பால்நிலைசார் சமத்துவம்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : “இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
C : “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
E : கௌரவ சட்டத்தரணி லலித் வர்ண குமார, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க விலைமதிப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(v) 2023 ஆம் ஆண்டுக்கான அரச தொழில்முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை.
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வவுனியா மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்.
(x) 2023 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii) 2023 ஆம் ஆண்டுக்கான நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2022 ஆம் ஆண்டுக்கான இளைஞர் படையணியின் ஆண்டறிக்கை
(xiv) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xvi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இரத்தினபுரி மாவட்டச் செயலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xvii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xviii) 2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.04.05 முதல் 2024.04.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xix) வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டலஸ் அழகப்பெரும
(ii) கௌரவ வீரசுமன வீரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வரிவிதிப்பு முறைமை பற்றிய வழிவகைகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 43 முதல் 55 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) பொதுத் தனிசு முகாமைத்துவம் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(iv) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(v) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(vi) நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(vii) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(viii) நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகளை வழங்கும் திட்டம்
(ix) அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் வினாவொன்று கேட்கப்பட்டது:-
கௌரவ இம்ரான் மஹ்ரூப்
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.