2024 ஜூன் 6ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-06-06

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
B : “பொருளாதார நிலைமாற்றம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
D : இணைப்புக் குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2023 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(vii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 52 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 யூன் 04 ஆம் திகதிய 2387/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) வீ.இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண        -     இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ அநுராத ஜயரத்ன                    
(iii)    கௌரவ அனுப பஸ்குவல்                    
(iv)    கௌரவ வருண லியனகே            -    இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

நாட்டிலுள்ள காடுகள் தொடர்பான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை மின்சாரம் சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

மூன்றாம் மதிப்பீடின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 103; எதிராக 59) திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை தபால் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பதிலீட்டாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1827 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 7ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.