2024 ஜூன் 4ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-06-04

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
B : (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டம்


சபாநாயகரின் அறிவித்தல்கள்

C : “இலங்கை மின்சாரம்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
D : “இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
E : “பொருளாதார நிலைமாற்றம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
F : கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
G : பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
H : வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
I : பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
J : வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
K : சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம்  பற்றிய துறைசார் மேற்பார்வை  குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
L : தவிசாளர் குழாத்தில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
M : அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
N : “இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள், முன்னேற்றம் மற்றும் எதிர்கால  நடவடிக்கைகள்” குறித்து  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வூட்டுவதற்கான அமர்வு


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -  
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVII ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIII பகுதியையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றச் சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2023 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஆண்டறிக்கை
(vii)    2020/2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(x)    2023 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கை

(xii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii)    2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி நன்மைகள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2024 மே 17 ஆம் திகதிய 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மை வழங்கல் நிகழ்ச்சித்திட்டம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    மின்சக்தி மற்றும் வலுசக்தி   அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கஞ்சன விஜேசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி (திருமதி)  தலதா அதுகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவை  உப குழுவினால் தயாரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பிற்கான கருத்தியல் கொள்கை கட்டமைப்பு பற்றிய அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நிமல் பியதிஸ்ஸ                     -     இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ சமன்பிரிய ஹேரத்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்

(ii) கௌரவ அனுர திசாநாயக்க
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள்

மேற்சொன்ன வினாக்களுக்கு கௌரவ கல்வி அமைச்சர் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி அவர்களுக்கு “இலங்கை கணிய அளவையாளர்களின் நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டதுடன் 1 ஆம் இலக்க விடயம் விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன.:-
(i)    பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii)    இலங்கை பட்டயக் கப்பல்தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(iii)    தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவ (கூட்டிணைத்தல்) சட்டமூலம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்சியாளர்களை கல்வியியல் பணியாட்டொகுதிக்கு உள்வாங்குதல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1704 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 5ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.