2024 மே 13ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-05-13

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : தவிசாளர் குழாத்தின் உறுப்பினர்களுடனான கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க  பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 4(அ) மற்றும் 16(4) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 48 ஆம் பிரிவின் கீழ் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 13(3)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 48 ஆம் பிரிவின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2024 மார்ச் 05 ஆம் திகதிய 2374/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ செஹான் சேமசிங்க                     
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

முப்படைகளுக்கான ஒதுக்கீடு, ‘அஸ்வெசும’ மற்றும் ஏனைய பிரச்சினைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காக

“குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 24 வரையான விடயங்கள்) சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-

(i)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iii)    இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    நிதிச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(v)    அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் நான்கு ஒழுங்குவிதிகள்
(vi)    ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள்
(vii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(viii)    சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ix)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(x)    ஜெயா கன்டெயனர் டொ்மினல் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை (2022)
(xi)    பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்  
(xii)    சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(xiii)    சவீர மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(xiv)    களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கிழக்கு மாகாணத்திலுள்ள (தற்காலிகமான) ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்ஸாரப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1715 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மே 14ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.