இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2010-07-01

கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்களுக்கு "இலங்கை செமட்ட செத மன்றச் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு "அங்கவீனர்களுக்கான ஆலோசனை உதவிகளையும் வழங்குவதற்கான திதொரா தியேட்டர் நிறுவக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ தயாசிறி ஜயசேகர அவர்களுக்கு "தேசமான்ய ரவீந்திர வணிகசேகர ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க அவர்களுக்கு "அரச ஊழியர் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தை ஏற்படுத்தும் பொருட்டும், அதன் அதிகாரங்கள், பணிகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பைக் குறித்துரைக்கும் பொருட்டும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதன் விளைவாக எழும் விடயங்கள் சம்பந்தமாக ஏற்பாடுகளைச் செய்வதற்கானதொரு" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஜே. ஆர். பி. சூரியப்பெரும அவர்களுக்கு "இலங்கைப் பொருளியற் கழக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) - இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பதினேழாவது திருத்தம் மற்றும் சுயாதீன நீதித்துறை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 2125 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2010) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2010 ஜூலை 2ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2010]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom