2024 மே 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-05-07

Print

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : “இலங்கை மின்சாரம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : “இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறி திறந்த நிறுவனம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களுடனான விசேட கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLII ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LI  மற்றும் LII ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLV மற்றும் XLVI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIX ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை

(vi) 2023 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின்  123(8) ஆம் பிரிவின் கீழ் உள்நாட்டு இறைவரி ஆணையாளார் நாயகத்திற்கு வழமையின் அடிப்படையில் பகிரப்பட வேண்டிய தகவல்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 மார்ச் 21 ஆம் திகதிய 2376/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(vii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 08 ஆம் திகதிய 2379/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(viii)    2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.03.01 முதல் 2024.04.04 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    “சவீர மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சமல் ராஜபக்ஷ                    
(ii)    கௌரவ கிங்ஸ் நெல்சன்                     
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

களுத்துறை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குமார வெல்கம அவர்கள் 2024.05.07 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பெண்கள் பற்றிய வலுவூட்டலுக்கு ஏற்பாடுசெய்வதற்கும்; பெண்களின் முன்னேற்றம் மற்றும் வலுவூட்டல் மீதான தேசியக் கொள்கையை வகுத்தமைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும்; பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கும்; பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளைத் தாபிப்பதற்கும் மற்றும் அத்தகைய உரிமைகளின் மீறுகைகளுக்கெதிராக குற்றவழக்குத் தொடுப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“பெண்களின் வலுவூட்டல்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு “ஊழியர் சகாய நிதிய (திருத்தம்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்கள்) சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 3 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-

(i)    பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii)    சத்திய ஸ்ரீ கணபதி பக்தி ஜன சேவா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அலுவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சமன்பிரிய ஹேரத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1803 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மே 08ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.