இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஏப்ரல் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-04-26

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது ─ VIII ஆம் பகுதி — இலங்கை சுங்கத்தில் காணப்படுகின்ற பல்வேறு நிதியங்களை முகாமைத்துவம் செய்தல் / நிருவகித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு மற்றும் நிதியியல் அறிக்கைகளும் தொழிற்பாடுகளும்
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஆண்டறிக்கையும் நிதிசார் கூற்றுக்களும்

(iii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றச் சபை முதல்வர் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

“பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா                    
(ii)    கௌரவ புத்திக பத்திறண                 -     பத்து மனுக்கள்
(iii)    கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய                    
(iv)    கௌரவ யதாமிணீ குணவர்தன                          -    இரண்டு மனுக்கள்                     
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

வீசா கட்டண உயர்வால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ சுற்றுலாத் துறை அமைச்சர் பதிலளித்தார்.


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் 2024.04.26 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

அரசாங்கத்துக்காகப் பொதுத் தனிசைக் கடனாகப் பெறுவதற்கும், வழங்குவதற்கும், சேவையளிப்பதற்குமான அதிகாரவளிப்புட்பட, பொதுத் தனிசு முகாமைத்துவத்துக்காக ஏற்பாடுசெய்வதற்கும், அத்துடன் உத்தரவாதங்களை வழங்குதலும், கடனாகப்பெற்ற பணத்திலிருந்து கடன்கொடுத்தலும், வழங்குநரின் கடன் மற்றும் நிதிக் குத்தகை உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளுதலும்; பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தைத் தாபிப்பதற்காகவும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக

“பொதுத் தனிசு முகாமைத்துவம்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)  

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1811 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மே 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom