2024 ஏப்ரல் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-04-25

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : ஒன்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான நில அளவைகள் சபையின் வருடாந்த அறிக்கைகள்

(iii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு  மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 நவம்பர் 30 ஆம் திகதிய 2360/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு  மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 சனவரி 02 ஆம் திகதிய 2365/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு  மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 சனவரி 07 ஆம் திகதிய 2365/84 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு  மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 பெப்ரவரி 19 ஆம் திகதிய 2372/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு  மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 மார்ச் 01 ஆம் திகதிய 2373/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி அறவீடு தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 சனவரி 04 ஆம் திகதிய 2365/50ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
    (2024 சனவரி 04 ஆம் திகதிய 2365/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பொது மக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ அகில எல்லாவல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய         -     ஆறு மனுக்கள்
(ii)    கௌரவ விஜித பேருகொட                    
(iii)    கௌரவ சிறிபால கமலத்                    
(iv)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார                    
(v)    கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ கல்வி அமைச்சர் பதிலளித்தார்.

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

தரமான உணவு குறித்து கருத்து தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மருத்துவ அதிகாரி ஆகியோரின் இறப்புகள்


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

திருகோணமலை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2024.04.25 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ வேலு குமார் 

ஒரு குழுவினரால் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

மின்சாரத்தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; தேசிய மின்சார மதியுரைப் பேரவையைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; இச்சட்டத்தின் நியதிகளின்படி 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத்தொழிலுக்கான ஒழுங்குபடுத்துநராகவிருப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின்கீழான எந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களில் மின்பிறப்பாக்கம், மின்கடத்துகை, மின்விநியோகிப்பு, மின்வியாபாரம், மின்வழங்குகை மற்றும் மின்பெறுகை சம்பந்தமான எல்லாச் செயற்பாடுகளும் உரித்தாக்கப்பட வேண்டுமோ அந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களின் கூட்டிணைப்புக்கு ஏற்புடையற்பாலனவான சட்டவாக்க வழிமுறைகளை ஏற்பாடுசெய்வதற்கும்; தொடர்புபட்ட எல்லாச் செயற்பாடுகளுக்கும் ஏற்புடையற்பாலனவாக இருக்கவேண்டிய செயல்முறைகளைக் குறித்துரைப்பதற்கும்; 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச்சபைச் சட்டத்தையும் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தையும் நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக

“இலங்கை மின்சாரம்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ ஏ.எச்.எம். பௌஸி அவர்களுக்கு “அல் பலாஹ் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii)    கெளரவ (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்களுக்கு “இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்களுக்கான சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 மற்றும் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iii)    உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iv)    அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் கீழான பிரகடனம்


ஒத்திவைப்புப் பிரேரணை

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1716 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஏப்ரல் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.