2024 ஏப்ரல் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-04-24 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ எச். நந்தசேன அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ எம். ஜீ. வீரசேன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : கௌரவ எச். நந்தசேன அவர்களின் மரணம்
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
C : “தென்னிலங்கை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : “இலங்கை மருந்தியல் சங்கம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
E : “இலங்கை மருந்தியல் சங்கம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
F : துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
H : வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
I : தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
J : கௌரவ ரொசான் ரணசிங்க , பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
K : கௌரவ சந்திம வீரக்கொடி, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
L : கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
M : கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
N : கௌரவ காஞ்சன விஜேசேகர, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI மற்றும் XXVII ஆம் பகுதிகளையும்;
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது - IV ஆம் பகுதி - இலங்கையின் தேசிய பூங்காக்களிலுள்ள மேய்ச்சல் நிலங்கைளை பேணிப்பாதுகாக்கும் நடைமுறையினை மதிப்பீடு செய்தல் தொடர்பான சுற்றாடல் கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான ஹோட்டல் டெவலப்பர்ஸ் (லங்கா) லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆண்டறிக்கை
(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 16 ஆம் திகதிய 2371/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 16 ஆம் திகதிய 2371/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 16 ஆம் திகதிய 2371/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் சவுதி அரேபிய இராஜியத்தின் அரசாங்கத்திற்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பைத் நீக்குவதற்கும் வரி செலுத்தாது தட்டிக் கழித்தல் மற்றும் தவிர்ப்பு என்பவற்றைத் தடுப்பதற்குமாக 2023 சனவரி 26 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை
(xiii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மார்ச் 19 ஆம் திகதிய 2376/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2380/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 45 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 27 ஆம் திகதிய 2360/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 45 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2371/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xviii) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரையுடன், சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமொன்றை பிரகடனப்படுத்துதல் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 டிசம்பர் 01 ஆம் திகதிய 2360/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரையுடன், சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமொன்றை பிரகடனப்படுத்துதல் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 டிசம்பர் 01 ஆம் திகதிய 2360/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx) (454 ஆம் அத்தியாயமான) முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் 8 மற்றும் 22 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 95 மற்றும் 96 ஆம் பிரிவுகளின் கீழ் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 09 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxi) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 34 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்பட்டியல்கள் தொடர்பாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2024 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2373/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ றோஹண திஸாநாயக்க
(ii) கௌரவ சாந்த பண்டார - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ விஜித ஹேரத் - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ காமினி வலேபொட
(vi) கௌரவ சமன்பிரிய ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
‘மவ்பிம’ பத்திரிகையில் தன்னைப் பற்றி இழிவான கருத்துக்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(ii) நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நிரோஷன் பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஏப்ரல் 25ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.