2024 ஏப்ரல் 01ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-04-01 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : “சவீர மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
C : “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : “களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
E : “சமாதி சுகாதார சேவைகள், சுற்றாடல், விவசாய, கலாசார, மற்றும் விளையாட்டு நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
F : “சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
G : வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
H : கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
I : கௌரவ ரோஹண பண்டார, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
J : கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
K : கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
L : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான நீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(vii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ix) 2022 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2021 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(xi) 2022 ஆம் ஆண்டுக்கான இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றும்
(xii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2022 ஆம் ஆண்டுக்கான இந்துப் பண்பாட்டு நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2021/2022 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை
(xv)1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 பெப்ரவரி 28 ஆம் திகதிய 2373/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvi) (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் 14 மற்றும் 23 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 52 ஆம் பிரிவின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் 2024 மார்ச் 22 ஆம் திகதி ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான வழிவகைகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல
(ii) கௌரவ கயந்த கருணாதிலக்க - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ தயாசிறி ஜயசேக்கர
(iv) கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(v) கௌரவ ஹேஷா விதானகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதிசெய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதிசெய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் மூலம் அவதானிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால், 2023 மார்ச் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட காலப்பகுதியில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லையானது 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யப்படுமாக.
(ii) நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2024 சனவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 யூலை 27 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யப்படுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 2 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-
(i) ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சுயாதீன ஆணைக்குழுக்களின் செயல்பாடுகளின் முக்கிய நோக்கங்கள் எட்டப்படவில்லை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஏப்ரல் 02ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.