2024 மார்ச் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-03-21 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : பாலியல் கல்வி தொடர்பில் தயாரிக்கப்பட்ட நூல்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIV ஆம் பகுதியையும்;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLI ஆம் பகுதியையும்;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXIX ஆம் பகுதியையும்; மற்றும்
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவவது தொகுதியின் XXVII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா ஆட்டோமிக் எனர்ஜி போர்டின் வருடாந்த அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நாலக்க பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக்க பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அஜித் மான்னப்பெரும
(ii) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - ஆறு மனுக்கள்
(iii) கௌரவ நாலக பண்டார கோட்டேகொட
(iv) கௌரவ ஷான் விஜயலால் த சில்வா - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சட்டத்தரணி டப்ளியூ.டி.ஜே. செனவிரத்ன
தன்னைப் பற்றி ரஞ்சன் ஜெயலால் அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள பொய்யான கருத்துகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்காக
“வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ டீ. வீரசிங்க அவர்களுக்கு “இலங்கை வசதிகள் முகாமைத்துவ நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 75; எதிராக 117) பின்னர் தோற்கடிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1711 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






