2024 மார்ச் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-03-19 |
|
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
B : கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
C : கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
D : கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
E : கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
F : கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
G : கௌரவ சனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
E : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXV மற்றும் XXVI ஆம் பகுதிகள்
B. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XL மற்றும் XLI ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காவது தொகுதியின் XXIII, XXIV மற்றும் XXV ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான துருசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2022 ஆம் ஆண்டுக்கான லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(viii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் விதப்புரைகளை கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 சனவரி 09 ஆம் திகதிய 2366/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் விதப்புரைகளை கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 சனவரி 09 ஆம் திகதிய 2366/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2023 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2024.01.01 முதல் 2024.01.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பெனடிக்ட் XVI கத்தலிக் இன்டர்நஷனல் இன்ஸ்ரிரியுற் ஒப் ஹயர் எடியுகேஷனால் வழங்கப்படும் மனித வள முகாமைத்துவத்தில் கௌரவ வணிக முகாமைத்துவ இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 03 ஆம் திகதிய 2356/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பிஸ்னஸ் மனேஜ்மன்ட் ஸ்கூல் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வணிக முகாமைத்துவத்தில் இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 17 ஆம் திகதிய 2358/69 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பெனடிக்ட் XVI கத்தலிக் இன்டர்நஷனல் இன்ஸ்ரிரியுற் ஒப் ஹயர் எடியுகேஷனால் வழங்கப்படும் இரண்டாம் மொழியாக ஆங்கிலமொழி கற்பித்தலில் கல்வி இளமாணி கௌரவ பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 21 ஆம் திகதிய 2359/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் கடலோர தொழிற்பாடுகளில் விஞ்ஞான இளமாணி மற்றும் இரசாயனவியல் கௌரவ விஞ்ஞான இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 28 ஆம் திகதிய 2360/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் உயிரியல் மருத்துவ விஞ்ஞானத்தில் விஞ்ஞான முதுமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 டிசம்பர் 13 ஆம் திகதிய 2362/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், லைசியம் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆரம்பக் கல்வியியல் கல்வியியல் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 டிசம்பர் 13 ஆம் திகதிய 2362/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் 7(ஏ), 10 மற்றும் 77 ஆம் பிரிவுகள் மற்றும் VI ஆம் பகுதியுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 82 ஆம் பிரிவின் கீழ் ஆயுர்வேத ஒழுங்குவிதிகள் தொடர்பாக சுகாதார அமைச்சரினால் 2024 சனவரி 24 ஆம் திகதி ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டி.பி. ஹேரத் - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ அனுப பஸ்குவல்
(iii) கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்
(iv) கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி
(v) கௌரவ இம்ரான் மஹ்ரூப்
(vi) கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் ‘மாதவிடாய்க்கால வறுமை’
மேற்சொன்ன வினாவிற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 20ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.