2024 மார்ச் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-03-06 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : இலங்கையில் சட்டக் கல்வியின் மீளாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான விதப்புரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : மலையக பெருந்தோட்டத்துறை சமூகம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான லோஹார் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(vii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான புத்தசாசன நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(viii) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கைகள்
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(ii) கௌரவ கெவிந்து குமாரதுங்க
(iii) கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
(iv) கௌரவ (திருமதி) மஞ்சுளா திசாநாயக்க
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
புதுப்பிக்கத்தக்க சக்தி கருத்திட்டங்கள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் பதிலளித்தனர்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பாக 2024.02.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக்க பிரியந்த அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சிந்தக அமல மாயாதுன்ன
தான் தொடர்பாக ‘டெய்லி மிரர்’ மற்றும் இணையதளத்தில் வெளியான தவறான கட்டுரை
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் முறையற்ற செயற்பாடு காரணமாக பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 2023.08.25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட விடயம், 2023.09.06 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளுக்கமைவாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டதோடு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களால் 2024 சனவரி மாதம் 24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விதப்புரைகளுக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் பாராளுமன்றச் சேவை இன்று முதல் அதாவது 2024 மார்ச்சு மாதம் 06 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 10 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தச்) சட்டமூலம்
(iii) ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம்
(iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தச்) சட்டமூலம்
(v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டமூலம்
(vi) கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம்
(vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம்
(viii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ix) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன் - இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 59; எதிராக 35)
(x) அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் கீழான பிரகடனம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பரவலாக்கப்பட்ட நிதி பயன்பாட்டின் வெளிப்படைத்தன்மை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹேஷா விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 07ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.