இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மார்ச் முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

திகதி : 2024-03-01

2024, மார்ச் 01 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 4.30 பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி:
(i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள்
(ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்)
(iii) ஈட்டுச்சட்டம் (திருத்தம்)
(iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தம்)
(v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்)
(vi) கம்பனிகள் (திருத்தம்)
(vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தம்)

(2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள்)

(viii) இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மூன்று (3) பிரேரணைகள் – To (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 24, 25 மற்றும் 26 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 4.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
   

2024 மார்ச் 06 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 10.30 - பி.ப. 5.00 பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் மேலதிக தொடர்ச்சி:
(i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள்
(ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்)
(iii) ஈட்டுச்சட்டம் (திருத்தம்)
(iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தம்)
(v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்)
(vi) கம்பனிகள் (திருத்தம்)
(vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தம்)

(2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள்)

(viii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ix) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 13 மற்றும் 12 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2024.02.03 ஆம் திகதிய 2369/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2024.03.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.03.06 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2024 மார்ச் 07 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி)
 
2024 மார்ச் 08 வெள்ளிக்கிழமை
  பாராளுமன்ற அமர்வு இல்லை
(பொது விடுமுறை)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom