2024 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-02-22

Print

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.

சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்

சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.    1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுச்  சட்டத்தின் 15(8) ஆம் பிரிவின் பிரகாரம், முறைப்பாட்டு இலக்கம் HRC/BD/215/22 ஐக்  கொண்ட  முறைப்பாட்டின் விதப்புரைகள் அமுல்படுத்தப்படாமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுவினால்  கௌரவ சனாதிபதி அவர்களுக்கு  சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

B.   
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXVIII ஆம் பகுதியையும்;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIII ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVIII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XL மற்றும் XLI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIV ஆம் பகுதி

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது —  III ஆம் பகுதி — நுகர்வோரைப் பாதுகாப்பதில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பங்களிப்பு தொடர்பான செயலாற்றல் தொடர்பான கணக்காய்வு அறிக்கை

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீடு தொடர்பில் (பதிற்கடமை) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2023 செப்டெம்பர் 21 ஆம் திகதிய 2350/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(ii)    2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதி வரிச்சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் கீழ் சேர் பெறுமதி வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2023 டிசம்பர் 19 ஆம் திகதிய 2363/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்த கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.

கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 திசம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2024 யூன் 05 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.

அனுதாபப் பிரேரணைகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற கௌரவ சனத் நிசாந்த அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.

அதனையடுத்து, 1709 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

2024 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.

சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்     

சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.  1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுச்  சட்டத்தின் 15(8) ஆம் பிரிவின் பிரகாரம், முறைப்பாட்டு இலக்கம் HRC/BD/215/22 ஐக்  கொண்ட  முறைப்பாட்டின் விதப்புரைகள் அமுல்படுத்தப்படாமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுவினால்  கௌரவ சனாதிபதி அவர்களுக்கு  சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

B.   

(i)     இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -

·         2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXVIII ஆம் பகுதியையும்;

·         2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIII ஆம் பகுதியையும்;

·         2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVIII ஆம் பகுதியையும்; மற்றும்

·         2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XL மற்றும் XLI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIV ஆம் பகுதி

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது —  III ஆம் பகுதி — நுகர்வோரைப் பாதுகாப்பதில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பங்களிப்பு தொடர்பான செயலாற்றல் தொடர்பான கணக்காய்வு அறிக்கை

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)     2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீடு தொடர்பில் (பதிற்கடமை) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2023 செப்டெம்பர் 21 ஆம் திகதிய 2350/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(ii)    2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதி வரிச்சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் கீழ் சேர் பெறுமதி வரி தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2023 டிசம்பர் 19 ஆம் திகதிய 2363/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்த கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.

கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 திசம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2024 யூன் 05 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.

அனுதாபப் பிரேரணைகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற கௌரவ சனத் நிசாந்த அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.

அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.