இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பெப்ரவரி இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

திகதி : 2024-02-16

2024, பெப்ரவரி 15 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 பெப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00 பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு:
(i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள்
(ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்)
(iii) ஈட்டுச்சட்டம் (திருத்தம்)
(iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தம்)
(v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்)
(vi) கம்பனிகள் (திருத்தம்)
(vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தம்)

(2024.02.09 ஆம் திகதிய 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள்)

(viii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(ix) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2024.02.09 ஆம் திகதிய 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 19 மற்றும் 18 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2024 பெப்ரவரி 21 புதன்கிழமை

மு.ப. 09.30 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2024.01.13 ஆம் திகதிய 2371/11 மற்றும் 2371/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகள் 2024.02.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.02.21 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
மு.ப. 09.30 - மு.ப. 10.30 (i) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2024.02.09 ஆம் திகதிய 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 21, 22 மற்றும் 23 ஆம் இலக்க விடயங்கள்)
மு.ப. 10.30 - பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2024 பெப்ரவரி 22 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.30 மறைந்த கௌரவ சனத் நிசாந்த, முன்னாள் பா.உ. அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
 
2024 பெப்ரவரி 23 வெள்ளிக்கிழமை
  பாராளுமன்ற அமர்வு இல்லை
போயா தினம் (பொது விடுமுறை)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom