2024 பெப்ரவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் - ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாம் கூட்டத்தொடரின் ஆரம்பம்

திகதி : 2024-02-07

Print

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாம் கூட்டத்தொடரின் பாராளுமன்ற அமர்வை கௌரவ சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தலைமை தாங்கி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல் பற்றிய கௌரவ சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனத்தை வாசித்தார்.

கௌரவ சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.


அதனையடுத்து, 1114 மணியளவில் பாராளுமன்றமானது 2024 பெப்ரவரி 08 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.